எஸ். எஸ். ஜெயின் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விசுவல் கம்யூனிகேசன் படித்து வரும் ஐஸ்வர்யா பத்தாம் வகுப்பு படிக்கிறபோது விஜே யாக தேர்வானவராம். சில ஆண்டுகள் படிப்புக்காக லீவ் விட்ட அவர் மீண்டும் மீடியா பக்கம் வந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு, பிளஸ் டூவில் 96 சதவிகிதம் மார்க் எடுத்தாராம் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவின் அப்பா பாரீஸ்கார்னரில் ஐஸ்வர்யா புரவிஷனல் ஸ்டோர் வைத்திருக்கிறார். அம்மா ஹவுஸ் ஒய்ப். அண்ணன் சந்தோஷ் கலைஞர் இசையருவி டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறார்.
கிளாசிக்கல் டான்ஸ், போக் டான்ஸ் என்றால் ஐஸ்க்கு இஷ்டம். பரதம் கொஞ்சம் தெரியும். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாலும் நிறைய கல்லூரிகளுக்கு ஜட்ஜாக போயிருக்கிறாராம் ஐஸ்வர்யா. அப்படிப் போனதில்தான் சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க் கால்குதிரை என்று அந்த பாரம்பரிய நடனங்களை பத்தியும் தெரிந்து கொண்டாராம்.
நிகழ்ச்சித் தொகுப்பு ஜாலியாக இருந்தாலும் அழுது ஆர்பாட்டம் பண்ணும் சீரியலில் நடிக்க மாட்டாராம் ஐஸ்வர்யா. 7சி காமெடி சீரியல் என்பதாலும், இலக்கணம் மாறுதோ தொடர் புதுமையும், புரட்சியும் கலந்த தொடர் என்பதாலும்தான் ஒத்துக்கொண்டாராம்.
ஐஸ்வர்யாவிற்கு சங்கர், கமலஹாசன், மணிரத்னம் படங்கள் பிடிக்குமாம். பேரரசு , விக்ரமன் படங்கள்ல வர்ற வசனங்கள் சரியான காமெடியாக இருக்கும். அதெல்லாம் மொக்கையான பஞ்ச் டயலாக்குகள் என்கிறார். இளையராஜா, ஏஆர் ரகுமான் இசையமைத்த பாடல்கள் கேட்டு ரசிப்பாராம்.
ஐஸ்வர்யாவிற்கு சங்கர், கமலஹாசன், மணிரத்னம் படங்கள் பிடிக்குமாம். பேரரசு , விக்ரமன் படங்கள்ல வர்ற வசனங்கள் சரியான காமெடியாக இருக்கும். அதெல்லாம் மொக்கையான பஞ்ச் டயலாக்குகள் என்கிறார். இளையராஜா, ஏஆர் ரகுமான் இசையமைத்த பாடல்கள் கேட்டு ரசிப்பாராம்.
பத்தாம் வகுப்பு படிக்கும் போதே நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தாலும் இதுவரைக்கும் யாரையும் ஐஸ்வர்யா காதலித்தது இல்லையாம். ஐஸ்வர்யாவை பார்த்து யாராவது பிடிச்சிருக்கு என்று சொன்னால் கூட அடிக்கமாட்டராம். நம்மளை எந்த அளவிற்கு ரசிச்சு சொல்றாங்க அவங்களைப் போய் ஏன் அடிக்கணும் என்று கேட்கிறார் அழகு ஐஸ்வர்யா.